Free higher education from Puthiya Thalaimurai

புதிய தலைமுறை அறக்கட்டளை இலவச உயர்கல்வித் திட்டத்தின் கீழ், பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற, பொருளாதாரத்தில் பின் தங்கிய, தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தரம் வாய்ந்த கல்வி நிலையங்களில் அவரவர் படிக்க விரும்பும் பட்டப் படிப்புகளுக்கான இடங்களை இலவசமாகப் பெற்றுத் தரவும் அவர்கள் கல்விக் கட்டணத்தை ஏற்பதற்காகவும் தொடங்கப்பட்டது இந்த திட்டம். இத்திட்டம் தொடங்கிய முதல் ஆண்டிலேயே 62 மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களது கல்வி கட்டணத்தை ஏற்று பயில விருப்ப பட்ட கல்லூரியில், விருப்ப பட்ட பாடத்தில் சேர்ந்து பயன் பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு (2011) 84 மாணவர்கள் உதவி பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ( B.Tech – 36 மாணவர்கள், BBA – 1, B.Sc. Nursing -3, B.Pharm – 3, BPT – 5, B.Sc. Bio Technology – 4, B.Sc. Micro Bioogy -4, B.Sc.Comp. Science – 1, B.Ed. – 27). இவர்களில் பலரது குடும்பத்தின் மாத வருமானம் ரூபாய். 2000 முதல் 4000 வரை. பொறியியல் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவருமே 1000 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள்.
Thanks and regards
Arul (AJ)


